Kaviyan Construction
நடப்பு திட்டங்கள்

காவியன் அடுக்குமாடி குடியிருப்பு

காவியன் அடுக்குமாடி குடியிருப்பு,
பழங்காநத்தம் பைபாஸ் ரோடு,
P R C டெப்போ அருகில்,
மதுரை - 625 010.

 
    • நவநாகரிக சமையல் அறை (Modular kitchen)
    • குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
    • மின் புகைபோக்கி
    • பாத்திரம் கழுவும் தொட்டி
    • சமையல் எரிவாயு அடுப்பு
    • கதவுகள் கொண்ட அலமாரிகள்
    • பயணிகள் லி∴ப்ட் மற்றும் பொருட்கள் ஏற்றி செல்லும் சர்வீஸ் லி∴ப்ட்
    • சமையலறையில் நீரை வடிகட்டித் தரும் பொருத்திகள்
    • அழகிய வேலைப்பாடுகளுடன் தரமான மரத்தாலான தலைவாசல் கதவு
    • நானோ தொழில்நுட்ப முறையில் செய்த சலவைக் கற்கள் பதிக்கப்பட்ட தளம்.
    • கரையான் , செல் அரிப்பைத் தடுப்பதற்கான பூச்சிக்கொல்லி நடவடிக்கைகள்.
    • 24 மணிநேர பாதுகாப்பு
    • உடற்பயிற்சிக் கூடம்
    • குழந்தைகள் விளையாடும் இடம்.
    • புல்வெளி அமைப்புகள்.
    • அசோஸியேஷன் அறை.
    • ஒவ்வொரு குடியிருப்பிற்கும் 300 வாட் மின்சக்தி கிடைக்கும் விதத்தில் 82.5 கி.வோ. மின் உற்பத்தி இயந்திரம்.
    • அனைத்து வகை உபகரணங்களும், கட்டுமானப் பொருட்களும் ஐரோப்பியத் தரம் கொண்டவை.
    • கட்டட வரைபடம் உரிய அரசு அதிகாரிகளால் ஒப்புதல் பெற்றவை. அனைத்து சட்டபூர்வமான ஆவணங்களை பாரத ஸ்டேட் வங்கி, எச்.டி.எப்.சி., ஆக்ஸிஸ் வங்கி போன்ற பிரதான வங்கிகளால் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டவை.
  • கட்டமைப்பு
    • உறுதி வாய்ந்த ஆர்.சி.சி. மேல்தளங்கள், சன்னல் மட்டச் சுற்றுக் கான்கிரீட் மற்றும் கான்கிரீட் நிழல் தடுக்குகள் கட்டடக் கலைஞரின் வடிவமைப்புக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளன.
    • செங்கல் சுவர்கள் உட்புறமும், வெளியிலும், சிமெண்ட் கலவை கொண்டு பூசப்பட்டவை.
    கதவுகள், சன்னல்கள்
    • தலைவாசல் நிலை,மற்றும் கதவுகள் உயர்தர மரத்தாலானவை. வார்னிஷ் பூச்சு, பித்தளை கீல்கள், கைப்பிடிகள், தாழ்ப்பாள்கள் கொண்டவை.
    • கோத்ரெஜ் தரத்தில் பூட்டுக்கள்.
    • மற்ற நிலை, மற்றும் கதவுகள் நாட்டு மரங்களால் ஆனவை. ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட தள்ளு கதவுகள், பட்டி பார்த்து, மட்டி பூசி, எனாமல் வண்ணக்குழம்பு பூசப்பட்டவை.
    • சன்னல்கள் உலகத்தரம் வாய்ந்தவை.
    மின்சாதனங்கள்
    • மும்முனை மின்சாரம். பிவிசி குழாய்கள் மூலம் சுவற்றுக்குள் பதிக்கப்பட்ட மின்இணைப்புகள்.
    • மின் இணைப்புக்குப் பயன்படும் காப்பிடப்பட்ட கம்பிகள் இந்தியத் தரச் சான்று பெற்றவை.
    • ஹேவெல்ஸ், எம்கே, லெக்ராண் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளான விசைப் பொறிகள்.
    • ஒவ்வொரு குடியிருப்பிற்கும் மின்தடை ஏற்படும் நேரங்களில் மின்உற்பத்தி இயந்திரம் மூலம் 300 வாட் மின்சக்தி வழங்கப்படும்.
    குழாய் இணைப்புகள்
    • அனைத்துக் குளிர்நீர் குழாய் இணைப்புகளும் ISI தரச் சான்று பெற்ற பிவிசி குழாய்களால் ஆனவை. வெந்நீர் குழாய்கள் ISI தரச் சான்று பெற்ற சிபிவிசி குழாய்களால் அமைக்கப்பட்டவை.
    புறச்சுவற்றின் பூச்சும் வண்ணக்கலவையும்
    • வெளிச் சுவர்கள் சிமெண்ட் கலவை கொண்டு செவ்வனே பூசப்பட்டு, வெளிச்சுவர் எமல்சன் அல்லது அதற்கிணையானதால் இருமுறை பூசப்பட்டது.
    பிரதானக் கூடமும், உணவுக் கூடமும்
    • கண்ணுக்கு இதமளிக்கும் வண்ணச் சலவைக்கற்கள் பதிக்கப்பட்ட தரை.
    • இருமுறை பட்டி தடவி வண்ணக் குழம்பு பூசப்பட்ட உட்புறச் சுவர்கள்.
    • காற்றாடிகளுக்காக இரண்டு மின் இணைப்பு முனைகள்.
    • சரவிளக்கிற்கான மின் இணைப்புமுனை ஒன்று.
    • விளக்குகளுக்கான மின் இணைப்புமுனை மூன்று.
    • கேபிள் இணைப்பிற்கும், தொலைபேசி இணைப்புக்குமான மின் இணைப்புகள் ஒன்று.
    • உணவுக்கூடத்தில் கண்ணாடி மற்றும் விளக்குடன் கூடிய கை கழுவும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
    படுக்கை அறைகள்
    • கண்ணுக்கினிய வண்ணச் சலவைக் கற்கள் பதிக்கப்பட்ட தரை.
    • பட்டி இருமுறை தடவப்பட்டு வண்ணக் குழம்பு பூசப்பட்ட சுவர்கள்.
    • ஒரு காற்றாடிக்கும் இரு விளக்குகளுக்குமான மின் இணைப்பு முனைகள்.
    • 5ஆம்ப்ஸ் செருகுமுனைகள் இரண்டு.
    • குளிர்சாதனம் அமைத்துக் கொள்வதற்கான வசதி.
    • பரணுடன் கூடிய சுவற்றுடன் அலமாரிகள். கடப்பைக் கற்களால் அமைக்கப்பட்ட கதவுகளுடன் கூடிய அடுக்குகள்.
    சமையல் அறை (அடுக்களை)
    • மின் புகைபோக்கி
    • குடிநீர் சுத்திகரிக்கும் சாதனத்துடன் கூடிய நவநாகரிக சமையல் அறை.
    • மெருகேற்றி மழுக்கி விடப்பட்ட கிரனைட் சமையல் மேடை
    • துருபடியாத எஃகாலான, பாத்திரம் கழுவும் தொட்டி கழிவுநீர் வெளியேறுவதற்கான வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
    • வழுக்காத முதல் தர செராமிக் கற்கள் பதிக்கப்பட்ட தரை.
    • சமையல் மேடைக்கு மேலே இரண்டடி உயரம் வரை வழுவழுப்பான கற்கள் பதியப்பட்டுள்ளன.
    • 5 ஆம்ப்ஸ் செருகுமுனைகள் இரண்டு.
    • 15 ஆம்ப்ஸ் செருகுமுனை ஒன்று.
    • இரண்டு விளக்குகளுக்கும் ஒரு காற்றாடிக்குமான மின்இணைப்பு முனைகள்.
    முற்றம்
    • வழுக்காத செராமிக் கற்கள் பதியப்பட்ட தரை.
    • கூரை விளக்குக்கான மின்இணைப்பு முனை ஒன்று.
    • 15 ஆம்ப்ஸ் செருகுமுனை ஒன்று.
    • சலவை இயந்திரத்திற்குள் நீர் செல்வதற்கும்,கழிவுநீர் வெளியேறுவதற்குமான குழாய் இணைப்புகள்.
    குளியல், கழிப்பறைகள்
    • வழுக்காத, முதல் தர செராமிக் கற்கள் பதிக்கப்பட்ட தரை.
    • தளத்திலிருந்து ஏழடி உயரம் வரை வழுவழுப்பான அலங்கார கற்கள் பதிக்கப்பட்ட சுவர்.
    • பாரிவேர், ஹிண்ட்வேர் போன்ற நிறுவனங்களுக்கு சமமான தயாரிப்பில் வெள்ளை, பழுப்பு நிற கழிவறைச் சாதனங்கள்.
    • உலகத்தரம் வாய்ந்த குளியல் குழாய் இணைப்புகள்.
    • குளிர்நீர், வெந்நீர் கலப்பதற்கான சாதனம். பூமாரி நீர்த் தெளிப்பான் இணைப்பு.
    • ஒரு விளக்கிற்கும், கழுவல் தொட்டிக் கண்ணாடி விளக்கிற்கும், வெந்நீர்க் கலனுக்கான மின்இணைப்பு முனைகள்.
  • முகப்புத் தோற்றம்

    மாதிரி அமைப்பு



Drop Your Query