Kaviyan Construction
முடிவுற்ற திட்டங்கள்

காவியன் என்கிளேவ் I (மதுரை கருப்பாயூரணி)

காவியன் என்கிளேவ்,
ராயல் கார்டன்,
தாய் மூகாம்பிகை நகர்,
கருப்பாயூரணி,
மதுரை - 625 010.

 
    • இரண்டு படுக்கை அறைகளுடன் பிரதானக் கூடம், சமையலறை, குளியலறை, கழிப்பறை வசதிகள் கொண்டவை.
    • கட்டட வரைபடம் உரிய அரசு அதிகாரங்களால் ஒப்புதல் பெறப்பட்டது
    • ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்.
    • மின் புகைபோக்கியுடன் நவநாகரிக சமையல் அறை (Modular kitchen).
    • கதவுகள் கொண்ட அலமாரிகள்.
    • கரையான், செல் அரிப்பைத் தடுப்பதற்கான பூச்சிக்கொல்லி நடவடிக்கைகள்.
    • பாதுகாப்பிற்காக வழுக்காத சலவைக் கற்கள் கொண்ட தளம்.
    • சமையலறையிலும் படுக்கை அறைகளிலும் கான்கிரீட் பரண்கள்.
    • பாதுகாப்பான கார் நிறுத்துமிடங்கள்.
    • அனைத்து சட்டபூர்வமான ஆவணங்களும், பாரத ஸ்டேட் வங்கி, எச்.டி.எப.சி., ஆக்ஸிஸ் வங்கி போன்ற பிரதான வங்கிகளால் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டவை.
  • கட்டமைப்பு
    • உறுதி வாய்ந்த ஆர்.சி.சி. மேல்தளங்கள், சன்னல் மட்டச் சுற்றுக் கான்கிரீட் மற்றும் கான்கிரீட் நிழல் தடுக்குகள் கட்டடக் கலைஞரின் வடிவமைப்புக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளன.
    • செங்கல் சுவர்கள் உட்புறமும் வெளியிலும் சிமெண்ட் கலவை கொண்டு பூசப்பட்டவை.
    கதவுகள், சன்னல்கள்
    • தலைவாசல் நிலை, கதவுகள் தேக்கு மரத்தாலானவை. வார்னிஷ் பூச்சு, பித்தளை கீல்கள், கைப்பிடிகள், தாழ்ப்பாள்கள் கொண்டவை.
    • கோத்ரெஜ் தரத்தில் பூட்டுக்கள்.
    • மற்ற நிலை கதவுகள் நாட்டு மரங்களால் ஆனவை. ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட தள்ளு கதவுகள்,பட்டி பார்த்து, மட்டி பூசி, எனாமல் வண்ணக்குழம்பு பூசப்பட்டவை.
    • சன்னல்கள் உலகத்தரம் வாய்ந்தவை.
    குழாய் இணைப்புகள்
    • அனைத்துக் குளிர்நீர் குழாய் இணைப்புகளும் ISI தரச் சான்று பெற்ற பிவிசி குழாய்களால்ஆனவை. வெந்நீர் குழாய்கள் ISI தரச் சான்று பெற்ற சிபிவிசி குழாய்களால் அமைக்கப்பட்டவை.
    புறச்சுவற்றின் பூச்சும் வண்ணக்கலவையும்
    • வெளிச் சுவர்கள் சிமெண்ட் கலவை கொண்டு செவ்வனே பூசப்பட்டு, வெளிச்சுவர் எமல்சன் அல்லது அதற்கிணையானதால் இருமுறை பூச்சிடப்பட்டது.
    பிரதானக் கூடமும் உணவுக் கூடமும்
    • கண்ணுக்கு இதமளிக்கும் வண்ணச் சலவைக்கற்கள் கொண்ட தரை.
    • இருமுறை பட்டி தடவி வண்ணக் குழம்பு பூசப்பட்ட உட்புறச் சுவர்கள்.
    • காற்றாடிகளுக்காக இரண்டு மின் இணைப்பு முனைகள்.
    • விளக்குகளுக்கான மின் இணைப்பு முனைகள் இரண்டு.
    • கேபிள் இணைப்பிற்கும், தொலைபேசி இணைப்புக்குமான மின் இணைப்புகள் ஒன்று.
    • மின்தடை நேரங்களில் மாற்று வசதிக்கான இணைப்புமுனை ஒன்று. உணவுக்கூடத்தில் கண்ணாடி மற்றும் விளக்குடன் கூடிய கை கழுவும் தொட்டி
    படுக்கை அறைகள்
    • கண்ணுக்கினிய வண்ணச் சலவைக் கற்கள் பதிக்கப்பட்ட தரை.
    • பட்டி இருமுறை தடவப்பட்டு வண்ணக் குழம்பு பூசப்பட்ட சுவர்கள்.
    • ஒரு காற்றாடிக்கும் இரு விளக்குகளுக்குமான மின் இணைப்பு முனைகள்.
    • 5ஆம்ப்ஸ் செருகுமுனைகள் இரண்டு.
    • குளிர்சாதனம் அமைத்துக் கொள்வதற்கான வசதி.
    • சுவற்றுடன் பதியப்பட்ட அலமாரிகள்.
    சமையல் அறை (அடுக்களை)
    • மின் புகைபோக்கி
    • குடிநீர் சுத்திகரிக்கும் சாதனத்துடன் கூடிய மாடுலர் அடுக்களை.
    • மெருகேற்றி மழுக்கிவிடப்பட்ட கிரனைட் சமையல் மேடை
    • துருபடியாத எஃகாலான பாத்திரம் கழுவும் தொட்டி, கழிவுநீர் வெளியேறுவதற்கான வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
    • வழுக்காத முதல் தர செராமிக் கற்கள் பதிக்கப்பட்ட தரை.
    • சமையல் மேடைக்கு மேலே இரண்டடி உயரம் வரை வழுவழுப்பாக கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
    • 5 ஆம்ப்ஸ் செருகுமுனைகள் இரண்டு.
    • 15 ஆம்ப்ஸ் செருகுமுனை ஒன்று.
    • இரண்டு விளக்குகளுக்கும் ஒரு காற்றாடிக்குமான மின்இணைப்பு முனைகள்.
    முற்றம்
    • வழுக்காத செராமிக் கற்கள் கொண்ட தரை.
    • கூரையில் விளக்குக்கான மின்இணைப்பு முனை ஒன்று.
    • 15 ஆம்ப்ஸ் செருகுமுனை ஒன்று.
    • சலவை இயந்திரத்திற்குள் நீர் செல்வதற்கும், கழிவுநீர் வெளியேறுவதற்குமான குழாய் இணைப்புகள்.
    குளியல், கழிப்பறைகள்
    • வழுக்காத, முதல் தர செராமிக் கற்கள் கொண்ட தரை.
    • தளத்திலிருந்து ஏழடி உயரம் வரை வழுவழுப்பான அலங்கார கற்கள் பதிக்கப்பட்ட சுவர்.
    • ஒற்றைக் கதவுடன் கூடிய கழிப்பறை.
    • பாரிவேர், ஹிண்ட்வேர் போன்ற நிறுவனத் தயாரிப்பில், வெள்ளை, பழுப்பு நிற கழிவறைச் சாதனங்கள்.
    • மெட்ரோ, கிராப்ட்ரீ, போன்ற நிறுவனத் தயாரிப்பிலான குளியல் குழாய் இணைப்புகள்.
    • குளிர்நீர், வெந்நீர் கலப்பதற்கான சாதனம். பூமாரி நீர்த் தெளிப்பான் இணைப்பு.
    • ஒரு விளக்கிற்கும், கழுவல் தொட்டிக் கண்ணாடி விளக்கிற்கும், வெந்நீர்க் கலனுக்கான மின்இணைப்பு முனைகள்.
    தண்ணீர் வசதி மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி
    • துளைக்கிணறுகள், நீர்மூழ்கி மோட்டார், இறைப்பான் சாதனங்கள் மற்றும் கழிப்பறைக் கழிவுத் தொட்டி.


Drop Your Query