Kaviyan Construction
நிறுவனம்

ஒரு தரமான இல்லத்தைச் சொந்தமாகக் கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் தேவைப்படுவது, விழைவது பற்றி காவியன் கன்ச்ஸ்டரக்சனில் உள்ள நாங்கள் நன்கு அறிந்துள்ளோம். 2005ல் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து மதுரையில் கட்டுமான வணிகத்தில் நாங்கள் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டுள்ளோம்.

பல திட்டங்களை காவியன் நிறுவனம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது ; இன்னும் பல புதிய திட்டங்கள் மதுரை, அருப்புக்கோட்டை, ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் அடுக்கு வீடு விற்றல்/கட்டமைத்தல் துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ளோம். நாங்கள் தொழில் நேர்த்தி ரீதியான பணிகளை அளிக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் திறமையுடன், தொடர்ந்து பணிபுரிவதற்காக நாங்கள் பெரும் ஈடுபாட்டுடன் உழைக்கிறோம். வெளிப்படையான தன்மை, நம்பகத் தன்மை ஆகியவைதான் எங்கள் செயற்பாடுகள் அனைத்திலும் முக்கியக் குவிப்பைக் கொண்டவை. எங்களிடத்தில் பெரிய அடுக்கு வீடுகள் விற்பவர்கள்/கட்டுபவர்கள் இணையமே உள்ளது; இதைத்தொடர்ந்து உங்கள் தேவைக்கு ஏற்ப நிலச் சொத்தை நீங்கள் பெறுவதற்கு உதவ இயலும்.

குறிப்பு

மதுரையில் மிக நவீனக் கலையுணர்வு, கட்டிடச் செறிவு, கட்டுமானம் இவற்றில் நிருபிக்கப்பட்ட சான்றுகளுடன் புகழ்பெற்ற கட்டமைப்பாளர்களாகத்தான் காவியன் கன்ஸ்ட்ரக்சன் பி. லிட் (KCPL) உள்ளது. எங்கள் நிறுவனம் மதுரையில் வீடுகள் வாங்குவோரின் பெருகிவரும் தேவைகளை நிறைவு செய்வதில் பெருநிறுவன அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. எங்களது காவியன் நிறுவனத்தை நடத்துபவர்கள் கட்டுமானத் துறையில் தேர்ச்சியான திறனையும் அறிவையும் கொண்டுள்ளனர்; பல அடுக்குக் கட்டிடங்களைக் கட்டி அவற்றை விற்பனையும் செய்துள்ளனர். எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படிச் சரியான இடத்தில் வசிக்கும் இல்லங்களையோ வணிகப் பகுதிகளையோ வாங்குவதற்கு நாங்கள் உதவுகிறோம். கட்டிடங்கள் வனப்புடன், கலையழகுடன், நேர்த்தியான முறையில் மிக அதிகமாகப் பயன்படுத்தக்கூடிய இடம் மற்றும் செயற்பாட்டுப் பயன்பாடு ஆகியவற்றைக் கொண்ட வகையில், அவரவர் கவினுணர்வு, நிதித்திட்டம் ஆகியவற்றைப்பொறுத்து வடிவமைக்கப்பட்டுள்ளன. உண்மையில், ஒவ்வொரு திட்டமும் வடிவமைக்கப்பட்டு, நிறைவேற்றி முடிக்கப்படுவதற்குமுன், வாடிக்கையாளரின் அன்றாடத் தேவைகளுக்கு உந்துதல் கொடுக்கும் ஒவ்வொரு சிறிய கூறுபாடும் கவனத்துடன் ஆராயப்படுகிறது. தொழில்நுட்பம், பாதுகாப்பு, மிக நவீன உள்கட்டுமானம் மற்றும் வசதிகள் ஆகியவற்றில் நாங்கள் முக்கியக் குவிப்பைக் கொண்டுள்ளோம்.

எங்கள் குழு

எங்கள் குழுவில் பயிற்சி பெற்ற, ஆற்றல் நிறைந்த நில உடைமைகள் பற்றிய தொழில் நெறிஞர்கள் (நேர்த்தியாளர்கள்) நிறைந்துள்ளனர். எங்கள் ஊழியர்கள் புதிய கட்டுமானப் பணிகள், சுற்றுலா வளர்ச்சித் துறை, மரபார்ந்த வணிக மற்றும் இல்லங்கள் தொடர்பான நில உடைமைகள் விற்பனையில் ஈடுபாடு உடையவர்கள்.

கட்டுமான வணிகத்தில் எங்களுக்கு எட்டு ஆண்டுகள் அனுபவம் மற்றும் பின்னணி உண்டு; முனிசிபல் உள்ளாட்சிகள், அரசாங்கம், பொறியியல், ஒப்பந்தச் சட்டம் ஆகியவற்றில் தேர்ச்சியும் உண்டு. IRS 1031 பறிமாற்றங்கள் போன்றவற்றில் நாங்கள் தேர்ச்சி அடைந்தவர்கள் என்பதோடு எங்களிடம் உள்ள கட்டிடக் கலை வல்லுனர்கள் மூலம் Design Build Services என்னும் வடிவமைப்பு, கட்டமைப்புப் பணிகளிலும் தேர்ந்தவர்கள்.



Drop Your Query