Kaviyan Construction
நடப்பு திட்டங்கள்

காவியன் குறிஞ்சி (ஊட்டி கேத்தி)

காவியன் குறிஞ்சி,
சஃபா வேலி,
கேத்தி ரயில்வே ஸ்டேசன் அருகில்,
கேத்தி, குன்னூர்,
நீலகிரி மாவட்டம் - 643 215.

 
    • மரத்தாலான தரை தளம்
    • தனித்தனி சுற்றுச் சுவர்கள்.
    • மலைப்பகுதிக்கேற்ற நிலஅமைப்புடன் கூடிய தோட்டம்
    • பாதுகாப்பான கார் நிறுத்துமிடங்கள்
  • மேல்கட்டுமானம்
    • கட்டமைப்பியல் ஆலோசகரின் அறிவுரைப்படி, பளு தாங்கக் கூடிய சுவர்கள் எழுப்பப் படுகின்றன.
    தொழில் நுணுக்கச் சிறப்புகள் அடித்தளம்
    • கட்டமைப்பியல் ஆலோசகரின் அறிவுரைப்படி, கான்கிரீட் தூண்கள் எழுப்பி உறுதியான அடித்தளம் அமைக்கப்படுகிறது.
    வெளிப்புறச் சுவர்கள்
    • கட்டடக் கலைஞருடைய அறிவுரைப்படி, சிமெண்ட் கலவை பூசப்பட்டு, முன் முகப்பு சலவைக் கற்கள் பதியப்பட்டு, பிற பகுதிகள் வெளிப்புற எமல்சன் அடிக்கப்பட்டுள்ளது.
    உட்புறச் சுவர்கள்
    • சிமெண்ட் கலவை பூசப்பட்டு, இருமுறை பட்டி தடவியபின் ஒருமுறை மட்டி தடவப்பட்டு, உட்புற எமல்சன் அடிக்கப்பட்டுள்ளது.
    • குளியலறை, கழிப்பறைகளில் கட்டடக் கலைஞருடைய அறிவுடைப்படி, வடிவமைக்கப்பட்ட தோற்றத்தில் சலவைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.
    தரைத்தளம்
    • பிரதானக் கூடம், உணவுக்கூடம், படுக்கை அறைகள் உட்பட உட்புறத் தரை முழுவதும் மென்தகடு போன்ற கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.
    • குளியறைகளிலும் கழிப்பறைகளிலும், வழுக்காத, 1x1 செராமிக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. சமையலறை, மாடியில் திறந்த வெளி, வராந்தா, ஆகிய இடங்களில் வழுக்காத 1x1 செராமிக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. முன் முற்றத்தில் அலங்கார வடிவமைப்புக் கொண்ட கான்கிரீட் கற்கள் அல்லது கிரனைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.
    • தண்ணீர்க் குழாய்கள் இணைப்புக்கள் அனைத்தும் ISI தரச் சான்று பெற்ற பிவிசி குழாய்களாகவும் வெந்நீர்க் குழாய்கள் சிபிவிசி குழாய்களாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
    கதவுகள், சன்னல்கள்
    • தலைவாசல் நிலை,மற்றும் கதவுகள் தேக்கு மரத்தாலானவை. வார்னிஷ் பூச்சு, பித்தளை கீல்கள், கைப்பிடிகள், தாழ்ப்பாள்கள் கொண்டவை.
    • கோத்ரெஜ் தரத்தில் பூட்டுக்கள்.
    • மற்ற நிலை,மற்றும்கதவுகள் மலை மரங்களால் ஆனவை. ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட தள்ளு கதவுகள். பட்டி பார்த்து, மட்டி பூசி, எனாமல் வண்ணக்குழம்பு பூசப்பட்டவை.
    • சன்னல்கள் கண்ணாடித் தடுக்குகளாகப் பக்கவாட்டில் திறந்து மூடும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
    • கரையான் , செல் அரிப்பை தடுப்பதற்கான பூச்சிகொல்லி நடவடிக்கைகள்.
    மின்சாதனங்கள்
    • ஒருமுனை மின்சாரம். சுவற்றில் பதிக்கப்பட்ட பிவிசி குழாய்கள் வழியாக மின்இணைப்புகள்.
    • தரமான ஹேவெல்ஸ், பினோலெக்ஸ் நிறுவனத் தயாரிப்புகளான மின் இணைப்பு ஒயர்கள் மின் இணைப்பிற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
    • லெஹ்ராண்ட், ஹேவெல்ஸ், ஆங்கர் தயாரிப்புகளான மாடுலர் விசைப்பொறிகள்.
    • மின்தடை நேரங்களில் மாற்று ஏற்பாட்டிற்கான கருவி பொருத்திக் கொள்ள வசதி. (invertor)
    • எம்சிபி – லெஹ்ராண்ட், ஸ்டாண்டர்ட் தயாரிப்பு.
    • கட்டடக் கலைஞர் அறிவுரைகளின்படி, தேவையான இடங்கள் அனைத்திலும் மின்இணைப்புக்கான முனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
    • குளியலறைகளில் வெந்நீர்க் கலன் பொருத்துவதற்கான வசதி உள்ளது. கழிப்பறைகளிலும் சமையலறையிலும் காற்றை வெளியேற்றும் காற்றாடி பொருத்திக் கொள்வதற்கான வசதி.
    • உணவுக் கூடத்தில் குளிர்சாதனப் பெட்டி இணைக்க வசதி.
    கழிப்பறை சாதனங்களும், குழாய் இணைப்புகளும்
    • பாரிவேர், ஹிண்ட்வேர் தயாரிப்புகளான ஐரோப்பிய,இந்திய வடிவமைப்புக் கழிவறை சாதனங்கள் ஸ்லிம்லைன் உந்துநீர்த் தொட்டியுடன்.
    • உணவுக்கூடத்தில், கிரனைட் மேடையுடன் நீர்வெளியேறுவதற்கான கை கழுவும் தொட்டி.
    • சமையலறையில் கழிவுநீர் வெளியேறுவதற்கான வசதியுடன் பாத்திரம் கழுவுவதற்கான பிரின்ஸ் நிறுவனத் தயாரிப்பான துருபடியாத எஃகிலான தொட்டி.
    • அனைத்துக் குழாய்களும் கிராப்ட்ரீ, மெட்ரோ தயாரிப்பிலானவை.


Drop Your Query